என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
மர்மமான முறையில் உயிரிழந்த ரவுடி ஸ்ரீதர்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

எம்ஜிஆர் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த ஸ்ரீதர் என்னும் ரவுடி காவல் நிலையத்தை விட்டு திரும்பும் போது மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். ரவுடி ஸ்ரீதர் பலமுறை திருட்டு புகார் அளிக்கப்பட்ட வழக்கு இவர் மீது பதிவு செய்ய ப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் திருட்டுப் போன வழக்கு குறித்து எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் ரவுடி ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் ஸ்ரீதர் அவரது மனைவி மஞ்சுவுடன் இன்று மதியம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ஸ்ரீதர் நெஞ்செரிச்சலாக உள்ளது என்று கூறி கே கே நகர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்பு சிறிது நேரத்திலே ரவுடி ஸ்ரீதர் மரணம் அடைந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று ஸ்ரீதர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.