ரூ.400 கோடி விற்பனை இலக்கு!.. புத்தாண்டை ஒட்டி டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த ரகசிய உத்தரவு..!



Rs.400 crore is a secret order issued by the Tasmac administration around the New Year

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில், ரூ.400 கோடி வரையில் புத்தாண்டுக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஐந்து ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. தினமும் சராசரியாக 100 கோடி வரையில் இந்த கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை இரண்டு மடங்கை தாண்டுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் பண்டிகையை மது குடித்து விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

வருகின்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு குடிமக்கள் தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. கடந்த பொங்கல் தினத்தில் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் மூன்று நாட்களில் ரூ.675 கோடி அளவுக்கு மது விற்பனையானது. இந்நிலையில் புத்தாண்டையொட்டி சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை உள்ளது. 

மேலும் வார இறுதி நாட்களில் புத்தாண்டு வருவதால் இரண்டு நாட்களுக்கு மதுவிற்பனை களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களிலும் சேர்த்து ரூ.300 கோடியில் இருந்து ரூ.400 கோடி வரையில் மது விற்பனை செய்ய தமிழக அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.