திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரு சப்பாத்தியால் வந்த விபரீதம்.. கதறி துடித்த பெற்றோர் ..நடந்தது என்ன?
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மேலபெருவிளை பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு 5 குழந்தைகள் இருக்கும் நிலையில் இவரது கடைசி மகள் சிவசாந்தினி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியிலிருந்து மாலை வீடு திரும்பிய சிவசாந்தினி தன் தாயிடம் பசி எடுப்பதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சிவசாந்தினியின் தாய் சமயல் அறையில் இருக்கும் சப்பாத்தியை எடுத்து சாப்பிட சொல்லியுள்ளார். இந்நிலையில் சிவசாந்தினி அந்த சப்பாத்தியை எடுத்து சாப்பிடும் போது அவருடைய சகோதரி சிவசாந்தினியின் தட்டில் இருந்து பாதி சப்பாத்தியை எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் கோபமுற்ற சிவசாந்தினி தன் சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பார்த்து கொண்டிருந்த சிவசாந்தினியின் தாய் அவர்களை சமாதானம் செய்துள்ளார். ஆனால் சிவசாந்தினி கோபமாக அறைக்குள் சென்று உள் பக்கமாக தாழிடுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் சிவசாந்தினியின் கோபம் சரியாகி விடும் என்று பெற்றோர் நினைத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிவசாந்தினி அறையை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.
இதனால் சிவசாந்தினியின் தாய் கதவை தட்டியுள்ளார். ஆனால் உள்ளிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிவசாந்தினியின் தாய் அக்கம் பக்கத்தினர் உதவியோடு வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து பார்த்த போது சிவசாந்தினி மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்டு அலறிய சிவசாந்தினியின் தாய் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிவசாந்தினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிவசாந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சகோதரியிடம் ஏற்பட்ட தகராறில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.