திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நேர்த்திக் கடன் செலுத்த சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்... பலியான சிறுவன்.. கதறும் குடும்பத்தினர்..!
சென்னை அயனாவரம் பெரியார் பள்ளத்தில் வசித்து வரும் ரமேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இதனையடுத்து பெரியபாளையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது குடும்பத்தாருடன் தங்கியுள்ளார் ரமேஷ். இந்நிலையில் ரமேஷின் மகன் நித்திஷ் விடுதியில் உள்ள நுழைவு வாயிலில் இருந்த ராட்சச இரும்பு கதவின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த ராட்சச கதவானது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நித்திஷ் மீது விழுந்தது. இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்படவே பெற்றோர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தனியாருக்கு சொந்தமான விடுதி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.