மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எனக்கும் வேணும்".. கேஸை திறந்துவிட்டு அண்ணியை கலவரப்படுத்திய கொழுந்தன்; உருட்டுக்கட்டையால் போட்டுத்தள்ளிய அண்ணன்..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, செங்கல் அணைரோடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரின் மனைவி பாக்கியம். தம்பதிகளுக்கு செல்வம், ராஜகணபதி என 2 மகன்கள் இருக்கின்றனர். மாலா என்ற மகள் இருக்கிறார்.
சகோதரர்களான செல்வம், ராஜகணபதி கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். செல்வத்திற்கு திருமணம் முடிந்து ஸ்ரீதேவி என்ற மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். ராஜகணபதியும் மும்பையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கும் 2 மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையில், ராஜகணபதி - அவரின் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்தவர், தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார். இதனால் 20 ஆண்டுகளாக ராஜகணபதி தனியே தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
தந்தையின் நிலத்தில் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வீடு கட்டிய நிலையில், வீட்டின் முதல் மாடியில் அவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்துள்ளார். கீழ்தளத்தில் ராஜகணபதி மற்றும் அவரின் தாயார் வசித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் ராஜகணபதி சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என செல்வத்திடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வத்தின் மனைவியை தகாத வார்த்தையால் திட்டிய ராஜகணபதி, கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு மிரட்டி இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக செல்வம் மற்றும் அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அவர்கள் ராஜகணபதியை நேரில் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், நேற்று இரவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இத்தகராறில் ஆத்திரமடைந்த செல்வம், ராஜகணபதியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்மாபேட்டை காவல் துறையினர், ராஜகணபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வத்தை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.