மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: பொதுத்தேர்வு அச்சத்தால் பரிதாபம்?.. சேலம் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்.!
தமிழ்நாடு முழுவதும் நாளை 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்கள், நாளை முதல் தேர்வெழுத இருக்கின்றனர். முன்னேற்பாடு பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியை சேர்ந்த மாணவி பிரகதி (வயது 17) தனது வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வீராணம் காவல் துறையினர், மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி பிரகதி தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.