தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் சோகம்: 10ம் வகுப்பு மாணவி பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை.! 



Salem Govt School Student Suicide On Class Room 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்தூர், அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவி மேகவர்ர்த்தினி (வயது 15). 

இவர் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக தெரிய வருகிறது. 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், பள்ளி வகுப்பறையிலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

மயங்கி விழுந்த நிலையில் இருந்த சிறுமியை மீட்ட ஆசிரியர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு சிறுமியின் மரணம் உறுதி செய்யப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.