53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
#BigNews: லாரி - தனியார் சொகுசு பேருந்து மோதி பயங்கர விபத்து : 5 பேர் பரிதாப பலி.. சேலத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!
தனியார் ஆம்னி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர், சென்னையை சேர்ந்த உறவினரின் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல ஆம்னி பேருந்தில் புக்கிங் செய்துள்ளனர்.
இந்த பேருந்து நேற்று இரவில் 11:30 மணியளவில் சென்னைக்கு புறப்படவே, பேருந்தில் 40 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்து 12:45 மணியளவில் பெத்தநாயக்கன்பாளையம் அருகே வந்துள்ளது.
அப்போது, சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி பயணம் செய்த லாரி பேருந்தின் மீது வேகமாக மோதியதில், மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்ற குடும்பத்தினர் 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விபத்தில் படுகாயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.