மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலை தெரிந்துகொண்ட பெண் கல்லால் அடித்தே கொலை.. சேலத்தில் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், தும்பிப்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் சேர்வராயன். இவரின் மகன் மாது (வயது 37). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மாதுவிற்கும் - அவ்வூரை சேர்ந்த பழனியம்மாள் (வயது 52) என்ற பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருவரும் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவில் மதுபோதையில் இருந்த மாது பழனியம்மாளை தகாத வார்த்தையால் திட்டி இருக்கிறார். பழனியம்மாள் பதிலுக்கு சத்தமிட இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அமைதிப்படுத்தியுள்ளனர். ஆனால், கோபத்தில் இருந்த மாது கல்லை எடுத்து பழனியம்மாளை தாக்கியுள்ளார்.
இதனால் மண்டை உடைந்த நிலையில் இரத்தம் வெளியேற பழனியம்மாள் சரிந்து விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள் இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாதுவை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மாதுவிற்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருக்கு திருமணம் முடிந்து குடும்பம் இருந்தாலும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் நண்பர்களுடன் சுற்றி வந்துள்ளார். கணவனின் செயலால் மனமுடைந்த மனைவி விவாகரத்து பெற்று சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து, பெண்மணி வேறொருவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.
மனைவி பிரிந்து சென்ற சில மாதங்களில் வருத்தமடைய தொடங்கிய மாது, அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இந்த விஷயத்தை தெரிந்த பழனியம்மாள் பெண்ணையும், மாதுவையும் கண்டித்து இருக்கிறார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் மாது பழனியம்மாளை கொலை செய்துள்ளார். அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.