பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஐயா நாங்க லவ் மேரேஜ்.. பாதுகாப்பு கொடுங்க..! ஓமலூர் காவல் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் ராக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவரவே, காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்துள்ளது.
இதனால் பெண் வீட்டில் இருந்து காதல் ஜோடிக்கு மிரட்டல் விடுத்ததாக தெரியவரும் நிலையில், காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தது.
இதனைப்போல, கமலாபுரம் பகுதியை சேர்ந்த காதல் ஜோடியும் பெற்றோரரை எதிர்த்து திருமணம் செய்து, பாதுகாப்பு கேட்டு ஓமலூர் காவல் நிலையத்தில் புகுந்துள்ளது. ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.
காதல் ஜோடியிடம் இருந்து புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், இரண்டு காதல் ஜோடியின் பெற்றோரையும் அழைத்து சமாதானம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, வெளியே இருந்த இருதரப்பும் உறவினர்களும் வாக்குவாதம் செய்துகொண்டதால், காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.