பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சொத்து தகராறில் சித்தப்பாவை கொன்ற மகன்.. சத்தமில்லாமல் நின்றவனை கட்டிக்கொடுத்த மோப்ப நாய்.. சேலத்தில் அதிர்ச்சி.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் கடையாம்பட்டியை அடுத்துள்ள உம்பிலிக்கம்பட்டி கிராமத்தில் ஜல்லி கிரஷர் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஆலையில் நடுபட்டியை அடுத்துள்ள காக்காயன்காடு கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 45) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
2 மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், மகன் சேலம் அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். சேகர் பகல் வேளைகளில் வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை மேய்ப்பதும், இரவில் நாராயணனின் கிரஷர் ஆலையில் காவலாளியாக பணியாற்றுவதும் என இருந்து இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினத்தில் இரவில் வேலைக்கு சென்றுள்ளார்.
மறுநாள் (நேற்று) காலை 7 மணியளவில் கிரஷர் நிறுவனத்திற்கு வேலையாட்கள் வந்த நிலையில், சேகர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்காகவே, அவர் தீவட்டிப்பட்டி காவல் துறையினருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்கையில், நள்ளிரவில் கிரஷர் நிறுவனத்திற்கு வாலிபர் வந்து செல்லும் காட்சிகள் பதிவானது.
மேலும், கொலையை செய்துவிட்டு அப்பகுதியிலேயே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் சுற்றித்திரிந்த நிலையில், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் சேகரின் உடல் அருகே மோப்பம் பிடித்தவாறு, சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய இளைஞரின் அருகே சென்று அதிகாரிகளுக்கு சிக்னல் கொடுத்தது. சுதாரித்த அதிகாரிகள் இளைஞரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு இளைஞரை அழைத்து சென்று நடத்திய விசாரணையில், சேகரின் அண்ணன் அண்ணாதுரையின் மகன் அண்ணாமலை (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் ஏற்கனவே கிரஷர் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த நிலையில், சேகருக்கும் - அண்ணாமலைக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சித்தப்பா சேகரை அண்ணாமலை கொலை செய்தது அம்பலமானது. அண்ணாமலைக்கு செல்வி என்ற மனைவி மற்றும் 2 பெண் மற்றும் 1 ஆண் என 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் ஏற்கனவே செம்மர கடத்தல் வழக்கில் கைதாகி இருந்த நிலையில், தற்போது நில பிரச்சனையில் சித்தப்பாவை கொலை செய்துள்ளார்.