மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான 15 நாட்களில் வயிறு நசுங்கி உயிரிழந்த புதுமாப்பிள்ளை.. லாரி சக்கரத்தில் சிக்கி சோகம்.!
வேலைக்கு சென்ற புதுமாப்பிள்ளை லாரி சக்கரத்தில் சிக்கி வயிறு நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஓமலூர் அருகே நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, வித்யா நகரை சேர்ந்தவர் ஜெகன். இவர் மேட்டூரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக ஜெகனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து மேட்டூருக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு ஜெகன் புறப்பட்டு சென்ற நிலையில், ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகேயுள்ள இரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளார்.
அப்போது, முன்னால் சென்றுகொண்டு இருந்த லாரியை இடது பக்கமாக முந்திச்செல்ல முயற்சித்துள்ளார். எதிர்பாராத விதமாக முந்தி செல்லும் போது பாலத்தின் சுவரில் மோதிய ஜெகன், லாரியில் பின்புற சக்கரத்தில் சிக்கி வயிறு நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஓமலூர் காவல் துறையினர், ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த லாரி ஓட்டுநர் மாரிமுத்துவிடம் விசாரணை நடந்து வருகின்றனர்.