பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
என் வீட்டுக்கு வாங்க., பெண் மோகத்தால் சிக்கி தவிக்கும் சேலம் அரசியல் பிரமுகர்கள்.. வீடியோ எடுத்து பிளாக்மெயில்.!
அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பெண்ணொருவரின் அழைப்புக்கு சம்மதம் தெரிவித்து வீடு தேடி சென்று இலட்சக்கணக்கில் பணம் இழந்த சம்பவம் நடந்துள்ளது. பணத்தை பங்கு போடுவதில் பிரச்சினை ஏற்பட்டு, பிளாக்மெயில் கும்பல் தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்ட அரசியல் பிரமுகர்களுக்கு விருந்து தருவதாக கூறி வீட்டிற்கு வரவழைக்க மயக்கும் விதமாக பேசி, அவர்களை வீடியோ எடுத்து கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாக சூரமங்கலம் சார்ந்த கலைச் செல்வி என்பவர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளார். அங்குள்ள இடங்கணசாலை பேரூராட்சியில் செல்வாக்கு பெற்ற பல கட்சிகளைச் சார்ந்த 6 பேரின் பட்டியல் தயாரித்த கலைச்செல்வி, அவர்களில் மூன்று பேரை தேர்வு செய்து ஒருவர் பின் ஒருவராக விருந்து தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வீட்டில் அரசியல்கட்சி பிரமுகர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோவையும் பதிவு செய்த நிலையில், இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி இருக்கின்றனர். மேலும் உங்களை காப்பாற்றுகிறேன் என்று செல்வம் என்ற நபர் நடிக்கவே, கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டு பிளாக்மெயில் நடந்துள்ளது.
கட்சி தலைமைக்கு கலைச்செல்வி நேராக சென்று வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், கலைச்செல்வி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாக சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இதற்குள்ளாக, ரூபக் என்பவர் கலைச்செல்வியை கடத்தி சென்று, யார் உன்னை இப்படி எல்லாம் செய்யச் சொல்கிறார்கள்? என்று கேட்டு அவரின் வாக்குமூலம் பெற்றதாகும் தெரியவருகிறது.
கடத்தல் கும்பலிடம் வாக்குமூலம் அளித்துள்ள கலைச்செல்வி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி செல்வம் மற்றும் அவருடன் சேர்ந்த 6 பேர் தன்னை இவ்வாறு செய்ய சொன்னதாக தெரிவித்து இருக்கிறார். மேலும், அவரின் தூண்டுதலின் பேரில் கட்சி தலைமை வரை சென்று புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது செல்வத்தின் தம்பியான சீனிவாசனை தாக்கியதாக மகுடஞ்சாவடி காவல்துறையினர் ரூபக்கை கைது செய்த நிலையல், இந்த சர்ச்சை சம்பவம் தெரியவந்துள்ளது. மேலும், அரசியல் கட்சி பிரமுகரின் ஆதரவாளர்கள் தன்னை கடத்திச் சென்று மிரட்டி வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும் கலைச்செல்வி புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட தரப்பும், சர்ச்சை செயலை செய்தவர்களும் வெவ்வேறு புகார் அளித்துள்ளதால், தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட 3 அரசியல்வாதிகளில் ஒருவர் மட்டுமே காவல் நிலையம் வரை சென்றுள்ளார். பிற இருவரும் தங்களின் தன்மானம் கருதி புகார் அளிக்காமல் இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.