#Watch: பட்டப்பகலில் கொல்லப்பட்ட ரௌடி; விபத்து என நினைத்து வீடியோ எடுத்து கண்ணீர்விட்ட பெண்.!



Salem Rowdy John Killed in Erode Daylight Murder Video 

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிபாளையம் பகுதியில் வசித்து வரும் ரவுடி ஜான் @ சாணக்யா, 2 கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி என 30 க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் சுற்றி வரும் நபர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரௌடி ஒருவர் கொலை செய்யப்பட்ட விஷயத்தில், ஜானுக்கு தொடர்பு இருந்துள்ளது.

இந்த வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த ஜான், பாதுகாப்பாக திருப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டு மறைவாக வாழ்ந்து வந்தார். இதனிடையே, வழக்கு விசாரணைக்கு பின்னர் ஜான் மீண்டும் காவல் நிலையத்தில் தினம் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது. இதனால் தனது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் இருக்கும் மாமனார் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார்.

Salem

ரௌடி கொடூர கொலை

அச்சமயம் ஈரோடு மாவட்ட பவானி பகுதியில் ஜானின் வாகனத்தில் தங்களின் காரை மோதிய கும்பல், விபத்து ஏற்படுத்துவது போல நாடகமாடியது. காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் ஜானை மனைவியின் கண்முன் சரமாரியாக குத்திக்கொலை செய்தது. இந்த சம்பவத்தை தடுக்க வந்த ஜானின் மனைவிக்கும் வெட்டு விழுந்தது.

இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 50 வயது தொடக்கப்பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

காரிலேயே துடிதுடித்து உயிரிழந்த ஜானின் உடலை சித்தோடு காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேர் கும்பலை சுட்டு பிடித்தனர். எஞ்சியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது. இதனிடையே, ஜானின் கொலை சம்பவத்தை வீடியோ எடுத்த இளம்பெண், விபத்து என நினைத்து, பட்டப்பகலில் கொலை நடந்ததன் விடியோவை பதிவு செய்தார். இது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஏற்காடு: காதலி கொலை விவகாரம்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் தகவல்கள்.. செல்போனில் ஆபாச படங்கள்.!