மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.100 கோடி மதிப்பிலான நகை, பணத்துடன் ஓட்டம்பிடித்த சேலம் எஸ்விஎஸ் நகைக்கடை உரிமையாளர்; தீபாவளி ஏலம் பொய்யாகி மக்கள் வேதனை.!
சேலம் நகரில் செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் நகைக்கடை சார்பில் ஏலசீட்டு மற்றும் நகைசீட்டு நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிறுவனம் சேலம், தர்மபுரி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் 11 இடங்களில் கிளைகள் அமைத்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
அப்பகுதியை சேர்ந்த பலரும் அங்கு நகைக்காக சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு பணம் கிடைக்கும் என எதிர்பார்த்த பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. வீராணம் பகுதியை சேர்ந்த சபரிசங்கர் தலைமறைவானதால், மக்கள் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
ரூ.100 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்துடன் சபரிசங்கர் ஓட்டம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இறுதிக்கட்ட நேரம் வரை வாடிக்கையாளர்களை நம்பவைக்க அலுவலகத்தை செயல்படுத்தி இருக்கின்றனர்.
பொதுமக்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர், நிறுவன உரிமையாளர் சபரிசங்கர், மேலாளர்கள் கவின், அஜித் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஏலசீட்டு நடத்தி வந்த நபர்கள், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது மக்களை ஏமாற்றி தலைமறைவாவது தொடர்ந்து நடந்து வருகிறது.
அனுதினமும் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் ஆசையை தூண்டும் வகையில் கவர்ச்சி விளம்பரங்கள் கொடுத்து பணம்பறிக்கும் குற்றவாளிகளின் செயல்கள் தொடருவது மக்களின் அறியாமையையும் உணர்த்துகிறது.
கையில் கொஞ்சம் பணம் இருந்தால் அரசு வங்கி, தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்தினால் எவ்வித பிரச்சனையும் கிடையாது.