மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே... பிறந்து ஒரு நாளே ஆன பிஞ்சுக் குழந்தையை ஏரியில் வீசி சென்ற மர்ம நபர்கள்... போலீசார் தீவிர விசாரணை!!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள குகூட்டஅள்ளி ஊராட்சி பகுதியில் நாயக்கனூர் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் நேற்று சிலர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு பச்சிளம் குழந்தை இறந்தும் மிதந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தண்ணீரில் மிதந்த குழந்தையை கைப்பற்றி உள்ளனர். அந்த குழந்தை பிறந்து ஒரே நாள் ஆன பெண் குழந்தை என தெரியவந்துள்ளது.
அதனையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக அந்த குழந்தையை அருகில் இருந்த பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஏரியில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பதையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.