ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பள்ளிகளில் அசத்தலான புதிய திட்டம்! தமிழக அரசுக்கு சத்யராஜ் மகள் விடுத்த கோரிக்கை! என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா, அவர் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் அவ்வப்போது உடல் நலம் குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருவார். மேலும் பள்ளி குழந்தைகளின் நலனுக்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் அரசு பள்ளியில் மாணவர்கள் நீர் அருந்த தண்ணீர்மணி அடிக்கும் புதிய திட்டத்தை அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து திவ்யா கூறுகையில், குழந்தைகள் , கோடைகாலத்தில் தண்ணீர் குடிக்கும் அளவிற்கு மழைக்காலத்தில் குடிப்பதில்லை. அதனால் பல உடல்பிரச்சினைகள் வரும், இவ்வாறு மழைக்காலத்தில் ஏற்படும் நோய்தொற்றுகளை தடுக்க குழந்தைகள் கண்டிப்பாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும் திருச்சி கருங்குளம் அரசுபள்ளியில் குழந்தைகள் தினமும் 2 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க மணிஅடிக்கும் வழக்கம் உள்ளது. அப்போது அனைவரும் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு மாணவர்கள் உடல்நலத்திற்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு விரைவில் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளது. மேலும் அரசியல் பற்றி தெளிவான முடிவு எடுத்துள்ளேன். ஆனால் இப்போது அதை வெளியிட வேண்டாம் என நினைக்கிறேன். மேலும் என் அரசியல் வளர்ச்சிக்காக அப்பாவின் புகழை ஒருபோதும் பயன்படுத்தமாட்டேன் என கூறியுள்ளார்.