#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திமுக அமைச்சருக்கு காத்திருக்கும் சிறைக்கதவுகள்?.. சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!
பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஜெயலலிதா போல சிறைக்கு செல்வார். அதனை எனது கண்களால் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருப்பதாக சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டியளித்தார்.
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணவிழா தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக மதுரை மாநகரில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் திருமணத்தை அமைச்சர் மாநாடு போல நடத்திவிட்டதாக புகழ்ந்து பேசினார்.
இந்நிலையில், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், "பத்திரப்பதிவுத்துறையின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஊழல் தற்போது நடைபெறுகிறது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் செலவு மட்டும் ரூ.90 கோடி முதல் ரூ.120 கோடி ஆகும். மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்திற்கு பின்னர், இந்தியாவே திரும்பி பார்த்த பிரம்மாண்ட திருமணம் அமைச்சர் மூர்த்தியின் திருமணம். ஜெயலலிதா சிறைக்கு சென்றதைப்போல அமைச்சர் மூர்த்தியும் சிறைக்கு செல்வார். இதனை எனது கண்களால் பார்க்க வேண்டும். அதுவே எனது ஆசை.
இதுதவிர்த்து, மூர்த்தியின் திருமணத்திற்கு கூட்டம் போதவில்லை என்று கூறி தொகுதியை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ரூ.300 கொடுத்து வந்து சாப்பிட்டுவிட்டு செல்ல சொல்லியுள்ளனர். மூர்த்தி என்ன அதானி, அமேசான் ஓனர் வீட்டில் சம்பந்தம் செய்துள்ளாரா?. முதல்வர் அமைச்சர் மூர்த்தியை புகழ்கிறார் என்றால், அவருக்கும் பங்கு செல்கிறது என்றே அர்த்தம். மொய் எழுதுவதற்கு பாதுகாப்பாக பல கேமராக்கள் இருந்தது" என்று தெரிவித்தார்.