#Breaking: விழுப்புரத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.. முதல் மாவட்டமாக வெளியானது அறிவிப்பு.! 



School - College Leave on Viluppuram on 2 Dec 2024 

மழை-வெள்ளம் காரணமாக நாளைய தினத்தில் விழுப்புரத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழை விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளை புரட்டியெடுத்துள்ளது. இதனால் பல முக்கிய கிராமங்களில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. விழுப்புரம் பேருந்து நிலையம் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

leave

பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளைய தினத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கனமழை காரணமாக பல இடங்களில் மாவட்டங்களில் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு ஆட்சியர் பழனிவேல் விடுமுறை அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: #JustIN: என்னது புயல் இன்னும் கரையவே கடக்கவில்லையா?.. தமிழ்நாடு வெதர்மேன் ஷாக் தகவல்..!

இதையும் படிங்க: கரையை கடந்தும் வேலையை காட்டிய பெஞ்சல் புயல்.. அடித்து நொறுக்கும் மழை‌‌.!