மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்டைலாக முடி வெட்டிய சிறுவன்.. பெற்றோர் திட்டியதால் எடுத்த விபரீத முடிவு!
சிவகங்கை அருகே ஸ்டைலாக முடி வெட்டியதற்கு பெற்றோர் திட்டியதால் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஒருவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். 15 வயதான இந்த சிறுவன் ஸ்டைலாக முடிவெட்டி வந்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை மகனை கண்டித்து முடியை குறைத்து வெட்ட வைத்துள்ளார்.
இதனால் அந்த சிறுவன் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முடி வெட்டும் விவகாரத்தில் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.