மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
1ம் வகுப்பு மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி.. கதறும் பெற்றோர்!
புதுச்சேரி அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ஏனாம் ஆந்திரம் அக்ரகாரத்தில் அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சாய் ரோகித் என்ற சிறுவன் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இவன் தினமும் உணவு இடைவெளியின் போது வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு திரும்பி வருவதை வழக்கமாக வைத்துள்ளான்.
இந்த நிலையில் நேற்று சிறுவன் மதிய உணவுக்கு வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து உடனடியாக பெற்றோர் மகனை பள்ளிக்கு சென்று தேடிப் பார்த்தனர். அங்கும் சிறுவனை காணாததால், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் மற்றும் அக்கம் பக்கத்திடம் விசாரித்தனர்.
இதனிடையே பள்ளி அருகிலுள்ள பாலயோகி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீரில் சிறுவன் மிதந்து கிடந்துள்ளான். இதனையடுத்து உடனடியாக சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.