மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொட்டி தீர்க்கும் கனமழை.! சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று நவம்பர் 15 புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று வரை கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று நவம்பர் 15 புதன்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் கனமழையால் ஏற்கெனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.