மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி.!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தொடர்ந்து கட்சி, துறைப் பொறுப்பு என சுறுசுறுப்புடன் சுற்றிவரும் அமைச்சர்களில், இவர் முக்கியமானவர்.
இதையும் படிங்க: #Breaking: திமுக பிரமுகர் அடித்துக் கொலை?.. இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்ட சடலம்.. குடும்பத்தினர் சோகம்.!
இந்நிலையில், தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை அமைந்தகரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
வயிற்று வலியால் அனுமதி என தகவல்
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் அமைச்சர், நாளை வீட்டிற்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று இரவில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இதனிடையே, தராது அமைச்சரும் மருத்துவமனையில் அனுமதியாகி இருக்கிறார்.
மேற்படி விபரங்கள் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ-வின் உதவியாளர் விபத்தில் மரணம்; டூ-வீலரில் நிலைதடுமாறி விழுந்து சோகம்.!