மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
14 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து, லாட்ஜில் நடந்த பயங்கரம்.. அதிரவைக்கும் சம்பவம்..!
14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த காமுகன் மற்றும் உடந்தையாக இருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் நேற்று 14 வயது சிறுமியை பள்ளி சீருடையுடன், ஒருவர் தனியார் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக சைல்டு ஹெல்ப்லைனுக்கு தகவல் கொடுத்த நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விடுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு அறையில் சிறுமியுடன் வாலிபர் இருந்துள்ளார்.
தொடர்ந்து அவர்களை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அப்போது விசாரணையில் இவரது பெயர் ஜெயசூர்யா என்பதும், தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அத்துடன் இவர் 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, ஆசை வார்த்தையில் மயக்கி விடுதிக்கு சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஜெயசூர்யா, அவருக்கு உடந்தையாக இருந்த விடுதி மேலாளர் ஸ்டீபன் மற்றும் சிவகங்கையை சேர்ந்த கண்ணன் ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.