திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.! விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகள்.!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் ஆறு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்து பாடங்களை படித்துச் செல்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் அரசு/ அரசு நிதியுதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு வரலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் 50 சதவீத எண்ணிக்கையில் பள்ளிகளுக்கு வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கூட்டம் கூடாதவாறு 50 சதவீத மாணவர்கள் மட்டும் வகுப்பறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதையொட்டி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்படவுள்ளனர். அதன்படி, ஒரு நாளில் ஒரு குழுவினர் மட்டுமே பள்ளிக்கு வரலாம். அதாவது முதல் குழுவினர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வரலாம். இரண்டாவது குழுவினர் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் பள்ளிக்கு வரலாம்.
வகுப்பறைகளுக்கு வெளியே மாணவர்கள் சுற்றித் திரிவதை ஊக்குவிக்கக் கூடாது. வகுப்பறை இருக்கைகள் 6 அடி இடைவெளிவிட்டு அமரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். எச்சில் துப்புவதையும் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.