திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. விபரம் இதோ.!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் இறுதிதேர்வுகள் நிறைவுபெற்று, தற்போது கோடை விடுமுறை நிறைவடையும் தருவாய் வந்துவிட்டது.
பள்ளிகள் பொதுவாக ஜூன் மாதம் முதலில் அல்லது 7ம் தேதிக்குள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டில் கோடை வெயிலின் தாக்கம் என்பது ஜூன் மாதத்தின் 5ம் தேதி ஆகியும் கடுமையாக இருக்கிறது.
இதனால் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே தள்ளிச்சென்ற நிலையில், வெப்பம் தொடர்ந்து மக்களை வாட்டி வதைப்பதால் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 14-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது