மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டின் முன்பு தனியாக விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமி.! பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி மாணவன்.!
சென்னை போரூர் பகுதியில் 6 வயது சிறுமி நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு தனியாக விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் வீடு அருகே வசிக்கும் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவன், அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அந்த சிறுமி அழுதபடியே வீட்டிற்கு வந்து அங்கு நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், அந்த பள்ளி மாணவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளி மாணவன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போக்சோ பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி மாணவனை கைது செய்தனர். பின்னர் அவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.