மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளுத்துவங்கும் கனமழை..! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்.!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஜூலை 6ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.