மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெட்டி சண்டையில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு: நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு..!
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (39). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணதேவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நியையில், சம்பவத்தன்று ராஜசேகரனின் தந்தை தட்சிணாமூர்த்தி மாடு ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற அருணதேவன் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது, அவர் தட்சிணாமூர்த்தியிடம், உங்களால் தான் நான் கீழே விழுந்தேன் என்று கூறி, வாக்குவாதம் செய்தார். இது அவர்களுக்கிடையே தகராறாக மாறியது. இதனை தொடர்ந்து, அருணதேவன் மற்றும் அவரது தம்பிகள் 3 பேர் சேர்ந்து ராஜசேகரனை தாக்கி அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜசேகரன் நெல்லிக்குப்பம் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அருணதேவன், அவரது தம்பிகள் ஆனந்தவேல், அசோக் குமார், அன்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருணதேவன், ஆனந்தவேல் ஆகியோரை கைது செய்தனர்.