கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கடலில் மூழ்கப் போகும் சென்னையின் பல நகரங்கள்! அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆய்வு முடிவுகள்!
அதிக அளவிலான கார்பன் வெளியேற்றத்தை தடுக்காவிட்டால் 2050-ம் ஆண்டுக்குள் சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் மக்கள் எரிக்கக் கூடிய பொருட்களில் இருந்து ஏராளமான கார்பன்கள் வெளியேறி வெளிமண்டலத்தில் கலக்கிறது. இதன் காரணமாக கடல்நீர் மட்டம் உயர்ந்து தொடர்ந்து கடல் அரிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த காலநிலை மாற்ற ஆய்வு மையம் சர்வதேச அளவில் புதிய ஆய்வை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது.
அதில், ஆசியாவில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா, தாய்லாந்து, வங்காளதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் உள்ள கடலோர நகரங்கள் மோசமான பாதிப்பை சந்திக்க கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னையும் ஒன்று என கூறப்படுகிறது.
2050 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், கொளத்தூர், புரசைவாக்கம், பெருங்குடி போன்ற பகுதிகள் கடல் நீரின் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் இருந்து அறிவிப்பு எதுவும் வராததால் மக்கள் பீதியில் உள்ளனர்.