திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சேலம்: பேக்கரியில் திடீரென வணிக சிலிண்டர் வெடித்து தீவிபத்து...
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள டீ கடை ஒன்றில் பயன்படுத்தப்பட்டு வந்த வணிக சிலிண்டரின் நாப் திடீரென தீ பற்றிய நிலையில் கடை முழுவதும் தீ பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேக்கரியில் திடீரென பற்றிய தீயை பேக்கரி ஊழியர்கள் சாக்கு துணியால் அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அது முடியாமல் போகவே உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேக்கரியில் பற்றிய தீயை நீரை பீய்ச்சி அடித்து அணைத்துள்ளனர். எனினும் பேக்கரியிலிருந்து அனைத்து பொருட்களும் தீயில் கருகி தேசமடைந்தன.