மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்.. சமோசாவில் கிடந்த பல்லி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தை மகன்..!
குன்னூர் அருகே உள்ள உபதலைப் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவருக்கு மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள கடை ஒன்றில் சமோசா வாங்கி சென்றுள்ளார்.
இதனை விஜயகுமாரும் அவரது மகனும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது சமோசாவில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் சுதாரித்துக் கொள்வதற்குள் இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அவர்கள் இருவரையும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து இதுகுறித்து அரவங்காடு காவல் நிலையத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கடை வெலிங்டன் கன்டோன்மென்ட்க்கு கீழ் வருவதால் கன்டோன்மென்ட் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக அந்தக் கடையை மூடியதோடு விசாரணையும் நடத்தி வருகின்றனர்.