#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஷாக்.. பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்து நாடகமாடிய தாய்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வசித்து வருபவர்கள் மணிகண்டன் - சினேகா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனால் சினேகா பிரசவம் முடிந்த கையோடு தனது தாய் வீட்டிற்கு சென்று குழந்தையோடு தங்கி இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சினேகாவின் பெற்றோர் வேலைக்காக சென்றுள்ளனர். இதனால் அவரது பாட்டி சினேகாவை கவனித்து வந்துள்ளார். அப்போது பாட்டி கடைவரை சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். சினேகாவும் குளித்துவிட்டு வருவதாக கூறி குளியலறைக்கு சென்றுள்ளார். பின்பு வந்து பார்த்தபோது அங்கிருந்த குழந்தையை காணவில்லை.
இதனையடுத்து குழந்தையை அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் புகாரின் அடிப்படையில் சினேகாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் அங்கிருந்த பால் கேன் ஒன்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் சினேகாவிடம் விசாரணை நடத்திய போது குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது தான் தான் என்று ஒப்புக்கொண்டார். மேலும் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையை பராமரிப்பது சிரமமாக இருப்பதாகவும் கணவருக்கு வலிப்பு நோய் இருப்பதனால் தொடர்ந்து மருத்துவம் பார்க்கப்பட்டு வருவதால் குழந்தை மற்றும் கணவரின் மருத்துவ செலவு இவற்றைப் பராமரிக்க முடியாமல் கஷ்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த சினேகா ஓயாமல் அழுது கொண்டிருந்த குழந்தையால் எரிச்சல் அடைந்து பால் கேனுக்குள் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் பச்சிளம் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.