மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை தாயாக்கிய காதலன்: போக்சோ சட்டத்திற்கு பயந்து தற்கொலைக்கு முயன்றதால் அதிர்ச்சி..!
செஞ்சி பகுதியில் சிறுமியை தாயாக்கிய வழக்கில் கைது செய்யப்படும் முன், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி (17). இவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு, கடந்த 2 ஆம் தேதி நள்ளிரவில் வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் சிறுமிக்கு ஆட்டோவிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இதன் பின்னர், சிறுமியும், குழந்தையும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், போத்துவாய் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் மகன் வின்சென்ட் என்பவரை காதலித்து வந்ததாகவும், அவரது ஆசை வார்த்தைகளை நம்பி அவருடன் உல்லாசம் அனுபவித்ததாகவும் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர், வின்சென்ட் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு, அனைத்து மகளிர் காவல்துறையினர், வின்சென்ட்டை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து அழைத்து வந்தனர். அப்போது, வின்சென்ட் வாந்தி எடுத்ததுடன் சோர்வாக இருந்தார். இது குறித்து அவரிடம் விசாரித்ததில், கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் பூச்சி மருந்து குடித்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, வின்சென்ட்டை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.