திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிர்ச்சி.. நண்பன் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர். தீவிர விசாரணையில் போலீஸ்..!
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது நண்பர் பிரபுதேவா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆற்றில் மூழ்கி பலியானார். இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த பிரேம்குமார் அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்துவதற்காக சென்றுள்ளார்.
இதற்கிடையில் இவரது நண்பர்கள் சைடு டிஷ் வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தென்னந்தோப்பில் தனியாக இருந்த பிரேம்குமார் மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் பிரேம்குமாரின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.