திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிர்ச்சி..மது அருந்தி உறங்கியவர் மரணம்.. மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்.!
குளச்சல் மண்டைக்காடு அருகேயுள்ள அழகன்பாறை காளிவிளை பகுதியில் வசித்து வருபவர் மரிய செபஸ்டியான். இவரது மகன் வினோ(44) கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவர் திருமணம் ஆகாதவர் என்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வினோ வழக்கம் போல் மதியம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வினோவிடம் எந்த ஒரு அசைவும் தெரியாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை மரிய செபஸ்டியான் உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
அங்கு வினோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வினோவின் தந்தை இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வினோ மதுவில் விஷம் கலந்து குடித்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.