மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்கிங் சம்பவம்... பிளஸ் 1 மாணவி மர்ம மரணம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி வலிப்பு நோய் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைக்குப் பிறகு ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு வலிப்பு நோய் ஏற்படவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது மாணவி ஏழு மாத கர்ப்பமாக இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தை சேர்ந்த பிரதீஷ் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
பிரதீஷ் அந்த சிறுமி வசித்து வந்த கிராமத்தில் இருக்கும் மளிகை கடையில் வேலை செய்து இருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. பிரதீஷ் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.