திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BREAKING | செந்தில் பாலாஜி தலையில் காயம்... ரொம்ப கடுமையாக நடத்தினார்கள்... கீழே தள்ளி விட்டு...அதிர்ச்சி பேட்டி.!
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள விவகாரம்தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் கடும் ஆலோசனையில் இருக்கிறது.
கடந்த 2011 முதல் 2015 வரையிலான ஆட்சியின் போது வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அது தொடர்பாக என்போர்ஸ்மென்ட் டைரக்டர் அதிகாரிகள் நேற்று இவரிடம் 18 மணி நேரம் விசாரணை செய்தனர். இந்த அழுத்தத்தின் காரணமாக அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்ட விதத்தில் மனித உரிமை ஈரல் நடந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் இன்று ஓமந்தூர் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து விசாரணை நடத்தினார் .
விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கண்ணதாசன் "அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தும் விசாரணை அதிகாரிகள் அவரை கடுமையாக நடத்தியதாக குற்றம் சாட்டினார். மேலும் விசாரணையின் போது அதிகாரிகள் தள்ளி விட்டதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தலை மற்றும் காது பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சியான தகவல்களை அளித்திருக்கிறார் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன்.