மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கையை காப்பாற்ற கிணற்றில் குதித்த அக்கா.. அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்!
திருச்சி அருகே தங்கையை காப்பாற்ற கிணற்றில் குறித்த அக்கா என இருவரும் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓட்டுனரான இவருக்கு சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி, வேம்பு என்ற 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் தர்ஷினி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளைய மகள் வேம்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இவர்களுடைய வயலில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது தாய் சசிகலாவுடன் மூன்று பிள்ளைகளும் சென்றுள்ளனர். அப்போது தாய் சசிகலா வயலில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், தர்ஷனியும், வேம்பும் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
அப்போது திடீரென வேம்பு கிணற்றில் மூழ்கியுள்ளார். இதனையடுத்து தங்கையை காப்பாற்ற தர்ஷினி கிணற்றில் குதித்துள்ளார். இதில், இருவரும் தண்ணீரில் மூழியுள்ளனர். இதனிடையே மேலே நின்று கொண்டிருந்த தம்பி கத்தி கூச்சலிட அனைவரும் ஓடி வந்தனர்.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி இறந்து போன தர்ஷினி மற்றும் வேம்புவின் உடலை சடலமாக மீட்டனர். இதனையடுத்து உயிரிழந்த சகோதரிகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த முசிறி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.