#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படிக்கட்டில் நின்றவாறு இரயிலில் வேடிக்கை பயணம்; 16 வயது சிறுவன் பரிதாப பலி.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் பாபு. இவரின் மனைவி ஜானகி. தம்பதிகளுக்கு 16 யதுடைய ஆகாஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருப்பதாக தெரியவருகிறது. திருநெல்வேலியில் அதற்கான முகாம் நடைபெற்றுள்ளது. இதனால் நேற்று இரவில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் சிறப்பு இரயிலில், காரைக்குடியில் இருந்து பயணத்தை செங்கோட்டை நோக்கி தொடங்கி இருக்கிறார்.
இரயில் இன்று காலை விருதுநகர், மத்தநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது இரயிலில் நின்று கொண்டு இருந்த ஆகாஷ் படியில் இருந்து தவறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் படிக்கட்டு பகுதியில் நின்று வேடிக்கை பார்த்தவாறு சிறுவன் வந்திருக்கலாம். அப்போது திடீர் காற்று இழுவை காரணமாக நிலைதடுமாறி அவர் விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.