மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாக்ஸ் கட்டிங் வெட்டி வந்த மகனை கண்டித்த தந்தை; 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 15 வயதுடைய மகன் இருக்கின்றனர்.
கண்டிப்பான தந்தையாக இருந்து வந்த இளையராஜா, சம்பவத்தன்று தனது மகனை முடிதிருத்தும் செய்யும் கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். சிறுவன் தனக்கு பிடித்தவகையில் பாக்ஸ் கட்டிங் வெட்டி இருக்கிறார்.
வீட்டிற்கு வந்ததும் சிறுவனை கண்டித்த பெற்றோர், மீண்டும் கடைக்கு அனுப்பி முடியை வெட்டவைத்துள்ளனர். இதனால் மனமுடைந்துபோன சிறுவன் பெற்றோரிடத்தில் கோபித்துக்கொண்டு இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் மனவேதனையில் உச்சத்திற்கு சென்ற அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.