திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி இரண்டு பேரால் பலாத்காரம்: கர்ப்பமான பின் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அதே ஊரைச் சார்ந்த கண்ணன் (வயது 42), மாரி (வயது 52) ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் அவர் கர்ப்பமான நிலையில், சிறுமியிடம் குழந்தைகள் நலத் துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது.
இதனையடுத்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளான கண்ணன் மற்றும் மாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.