#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
52 வயதில் செய்யிற சேட்டையா இது?.. அங்கன்வாடி பெண் பணியாளர்களை பதறவைத்த ஆசாமி கைது..!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 70க்கும் அதிகமான பெண்கள் அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறது.
அங்கன்வாடி பெண் ஊழியருக்கு கடந்த ஒரு ஆண்டாகவே தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவது என அட்டகாசம் செய்துள்ளார்.
பெண்கள் அந்த செல்போன் நம்பரை பிளாக் செய்தும் பலனில்லை. இதே செயல் தொடர்ந்து வந்ததால், அவர்கள் மர்ம நபரை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
தங்களின் திட்டப்படி போனில் பேசிய மர்ம நபரை நேரில் வரவழைத்த பெண்கள், 52 வயதுடைய ராஜேந்திரன் என்ற நபரை பிடித்தனர். அவரை பெண்கள் ஒன்றாக சேர்ந்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரன்-பேத்தி எடுத்து மகிழ்ச்சியாக வாழவேண்டிய காலத்திலும் தொடர்ந்த சல்லாப புத்தி காரணமாக, பெண்களை அவதூறாக பேசிய ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளது 72 பெண்கள் மட்டுமல்லாது பலரையும் நிம்மதியாக்கி இருக்கும்.
அவரிடம் விசாரணை நடந்தால் தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏதேனும் நடந்துள்ளன? வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்ற விபரம் தெரியவரும்.