மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைநிர்வாண கோலத்துடன் வாக்களிக்க முயற்சித்த தனியார் வங்கி ஊழியர்.. அதிர்ந்துபோன மக்கள்.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செந்தமிழ் நகரில் வசித்து வருபவர் மகேஷ் பாபு. இவர் தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். மேலும், மாநில நகை மதிப்பீட்டாளர் சங்க செயல் தலைவர் பொறுப்பும் வகிக்கிறார்.
இந்நிலையில், சிவகங்கை மருதுபாண்டியர் நகர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வாக்குகளை பதிவு செய்ய வந்த மகேஷ்பாபு, வாக்குச்சாவடி முன்பு திடீரென ஆடையை களைந்து அரைநிர்வாண கோலத்தில் நின்றார்.
மேலும், தனது நகை மதிப்பீட்டாளர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற பதாகையை கழுத்தில் தொங்கவிட்டவாறு வாக்குப்பதிவு மையத்திற்குள் செல்ல முயற்சித்தார்.
இதனைகவனித்த காவல் அதிகாரிகள் மகேஷ் பாபுவை தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்து ஆடையை அணிந்த பின்னர் வாக்குப்பதிவு மையத்துள் வாக்களிக்க அனுமதி செய்தனர். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.