மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செய்வினையால் மகள் மரணம் என சந்தேகம்; மூதாட்டியை கடப்பாரையால் அடித்து கொன்ற பயங்கரம்.. பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.!
தனது மகளுக்கு வைத்த செய்வினையால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று எண்ணிய தந்தை, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 58 வயது மூதாட்டியை அடித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காராம்பட்டியில் வசித்து வருபவர் சின்னக்கண்ணு. இவரின் மனைவி லட்சுமி (வயது 58). இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் கருப்பையா (வயது 58). சின்னக்கண்ணு குடும்பத்திற்கும் - கருப்பையா குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே, கடந்த 1 மதத்திற்கு முன்பு கருப்பையாவின் மகள் உயிரிழந்துள்ளார்.
தனது மகளின் இறப்புக்கு லட்சுமி வைத்த செய்வின்னைதான் காரணம் என்று கருதிய கருப்பையா, லட்சுமியிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமி நேற்று ஆடு மேய்க்க சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அவருடன் ஆண்டிச்சி என்ற பெண்மணியும் வந்துள்ளார். இவர்கள் இருவரும் காராம்பட்டி கண்மாய் அருகே வருகையில், அங்கு வந்த கருப்பையா லட்சுமியிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த கருப்பையா கடப்பாரையை எடுத்து லட்சுமியை தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த லட்சுமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆண்டிச்சி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிவகங்கை தாலுகா காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.