#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓடும் ரயிலில் பதுங்கி இருந்த பாம்பு... 21 வயது இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!!
கேரளா மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி குருவாயூர் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சென்றுள்ளது. அதில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் ரயிலின் 7 ஆம் நம்பர் கோச்சில் பயணித்துள்ளார். அப்போது, ரயில் எட்டுமானூர் அருகே வந்த போது கார்த்திக்கை ஏதோ கடித்தது போன்று தெரிந்துள்ளது. அதனையடுத்து கார்த்திக் கீழே பார்த்த போது அங்கு நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது.
அதனை கண்டு அதிர்ந்து போன கார்த்திக் சக பயணிகளிடம் கூறியுள்ளார். உடனே ரயில் நிறுத்தப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கார்த்திகை கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ரயில் முழுவதும் பரபரப்பு நிலவியது.
மேலும் அந்த ரயிலில் எலி தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக தான் எலிகளை சாப்பிட பாம்பு உள்ளே வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் அந்தப் பெட்டியை மட்டும் தனியாக கழட்டி விட்டு சீல் வைத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.