குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
குளத்தில் மீன் பிடிப்பதற்காக கட்டி வைக்கப்பட்ட வலை! அதிகாலையில் வலையை பார்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அமலரூபம் இவர், அப்பகுதியில் மலையடிவாரம் உள்ள பந்தபாறை தாமரைக்குளத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார்.
இந்த குளத்தில் பூக்கும் தாமரை பூக்களையும், தாமரை இலைகளையும் தினந்தோறும் பறித்து, பூக்கடைகளுக்கும், நாட்டு மருந்து கடைகளுக்கும் விற்பனை செய்து வந்துள்ளார். மலையடிவாரத்தில் குளம் இருப்பதால், மலைப்பாம்பு மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கவருவது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் குளத்திற்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்றுகாலை மழைவிட்டதும் மீன் பிடிப்பதற்காக குளத்திற்கு சென்றுள்ளார் அமலரூபம். அப்போது அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மீன் வலையில், இறந்த நிலையில் 4 மலைப்பாம்புகள் கிடபாந்துள்ளது.
இதுகுறித்து அமலரூபம் கூறுகையில், குளத்தில் மீன் வளர்க்கிறேன். அவற்றை பிடிப்பதற்காக மர்மநபர்கள், நான் இல்லாத நேரத்தில் வலைகளை கட்டியுள்ளனர். அருகில் உள்ள மலைப்பகுதியிலிருந்து வந்த 4 மலைப்பாம்புகள் இந்த வலையில் சிக்கி இறந்துள்ளன என கூறியுள்ளார்.