#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தந்தைக்காக மகன்கள் செய்த நெகழ்ச்சி செயல்.. வைரலாகும் புகைப்படம்!
கள்ளக்குறிச்சி உயிரிழந்த தந்தைக்கு மகன்கள் சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டி கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அன்பரசுவின் தந்தை சங்கர் ஒரு விபத்தில் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சோழபாண்டியபுரம் கிராமத்தில் வசிக்கும் சந்தியா என்பவருக்கும், அன்பரசுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதில், தனது தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக வடிவமைத்து தனது திருமண நிகழ்ச்சியில் வைத்துள்ளார்.
மேலும், தனது திருமண ஊர்வலத்தின் போதும் தந்தையுடன் வருவது போல சிலையை அருகில் வைத்து வந்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.