மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென்று திறக்கப்பட்ட கதவு அதிர்ச்சியில் உறைந்த எஸ்.பி.அலுவலகம்.! அப்படி என்னதான் நடந்தது.?
மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகரை அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் என்ற பகுதியில் புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் நூற்றுக்கும் அதிகமான காவல் துறையினர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில், சென்ற வாரம் ஒரு பெண் காவலர் இரவு பணியிலிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் எஸ்பி அலுவலகத்திலிருக்கின்ற ஒரு அறையில் முனங்கள் சத்தம் எழுந்துள்ளது.
உடனே இது குறித்து ஆயுதப்படை ஆய்வாளர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்பு அந்த இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் வெகு நேரமான பின்னரும் கதவு திறக்கப்பட்டவில்லை. பின்னர் பலமாக தட்டிய பிறகு கதவு திறக்கப்பட்டது.
அந்த அறையில் ஆண், பெண் உள்ளிட்ட இரு காவலர்கள் அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், ஆண் காவலர் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்ததும், பெண் காவலர் குத்தாலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் திருமணமாகாதவர்கள் என்ற விவரமும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பணி நேரத்தில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் இதுவரையும் பணியிடையே நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.