மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு! முன்பதிவு செய்யாதவர்களுக்கு அரிய வாய்ப்பு!.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி-தாம்பரம், சென்னை-கோவைக்கு சவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 8-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு சவிதா சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
தாம்பரத்தில் இருந்து நவம்பர் 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். தீபாவளி பண்டிகையை ஒட்டி தற்போது அனைத்து ரயில்களும் டிக்கெட் வெய்ட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த நிலையில் இந்த சிறப்பு ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.